ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!

மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையிலுள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர். இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும், தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும், வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறிய முடிந்தது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் ... கோப்பு படத்தில் (இ-வ) செல்வா பாண்டியன், அதியமான் மற்றும் அக்னி இன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்...
தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்!... தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்! இலங்கை அரசின் கொடியை உயர்த்திக் கொண்டு ஓடினார்! தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் ஈழத் ...
TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்!... TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்! TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்! ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்...
சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகும் ஈழத் தமிழர்!... சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம்! சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம்...
Tags: