இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!

இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மாகாணம், தியாதளவாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி நேற்று காலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றது. கஹகோல்லா பகுதியில் அந்த பேருந்து வந்தபோது, அது திடீரென வெடித்து சிதறியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பில் பேருந்து பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

‘‘இது தீவிரவாத செயலாக இருக்க முடியாது. பேருந்தில் இருந்த வெடிப் பொருள் வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகே குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியும். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்’ என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள ப... இலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள புதிய தமிழ் தொலைக்காட்சி! இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் நல்லிணக்க தொலைக்கா...
தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எத... தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது! தமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அத...
திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷான... திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு! திருநங்கை என்பதால், மத்திய அரசு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கவி...
இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிக... இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்! 11 முன்னாள் விடுதலை புலிகள் உட்பட 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர். இதுகுற...
Tags: