இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார்  மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 84-ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெறுகின்றது. இதன் போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் 84 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது இது வரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றது. மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை காபன் பரிசோதனைக்கு புலோரிடாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் குறித்த மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்... இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி! இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வ...
“காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை” வரும... "காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை" வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது! இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் காணாமல் போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்...
இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்... இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்! இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்...
மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு... மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்...
Tags: 
%d bloggers like this: