இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர் 109 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர் 109 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர் 109 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 109 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 3 நாள் பயணமாக இந்தியா வரவிருந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவரது இந்திய சுற்றுப் பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கபட்டிருந்த 109 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 79 மீனவர்கள், பருத்தித்துறை நீதிமன்றத்தில் 30 மீனவர்கள் என மொத்தம் 109 மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.இதனால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர் இருப்பதால் இந்திய பயணத்தை ரத்துசெய்துவிட்டதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.

  • தி இந்து

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால... ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு! ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சி...
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்க... இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு குத்தகை இல்லை- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்! தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்ப...
மகாராஷ்டிரா-வில் அனாதையாக நிற்கும் 849 கன்னியாகுமர... மகாராஷ்டிரா-வில் அனாதையாக நிற்கும் 849 கன்னியாகுமரி மீனவர்கள்! கடந்த நான்கு நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட ஓகி புயல் காரணமாக கடலுக்கு...
ஈரானில் கைது செய்யப்பட்ட15 தமிழக மீனவர்கள்!... துபாயில் மீ்ன் பிடிக்கச் சென்றபோது, எல்லை தாண்டியதாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விசைப்படகில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தை சேர்ந்த ம...
Tags: