மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர், தொண்டு நிறுவனங்கள் உதவியால், சென்னை திரும்பினர்.

திருச்சி, திருவாரூர், அரியலுார் மாவட்ட விவசாயிகளிடம், ‘கை நிறைய சம்பளம்; மலேசியாவில் வேலை’ என, முகவர்கள் ஆசை காட்டினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இதை நம்பிய, ஆறு பேர், 85 ஆயிரம் ரூபாய் கொடுத்து, 2017 நவம்வர், திருச்சியில் இருந்து, மலேசியா சென்றனர்.

ரப்பர் தோட்டத்தில், தினமும், 20 மணி நேர வேலை தரப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர். பேசியபடி சம்பளமும் தரப்பட வில்லை; சரியான உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

தங்கள் நிலைமையை, நண்பர்கள் வழியாக தெரிவித்து, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடினர். ஆறு பேரையும் மீட்ட தொண்டு நிறுவனம், மலேசியாவில் இருந்து, விமானம் வழியாக சென்னைக்கு அனுப்பி வைத்தது. ஆறு பேரும், சென்னை வந்தடைந்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்து கூறியதாவது:

‘டெல்டா மாவட்டங்களில் சரியான விளைச்சல் இல்லாததால், வேலை இன்றி தவித்தோம். அப்போது, ‘மலேசியாவில் வேலை உள்ளது; மாதம், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம்’ என, எங்களை அணுகிய முகவர்கள் கூறினர்.

இதை நம்பி, 65 ஆயிரம் ரூபாய் முதல், 85 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து, நவம்பர் மாதம் மலேசியா சென்றோம்.

ஆனால், அங்கு ரப்பர் தோட்டத்தில், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டோம். தொண்டு நிறுவன உதவியால் திரும்பி வந்து விட்டோம்.

‘வெளிநாட்டு வேலை; நல்ல சம்பளம்’ என, யார் கூறினாலும், நம்பி யாரும் ஏமாற வேண்டாம்,’ என்கின்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மலேசிய அமைச்சரவையில் இடம் பிடித்த நான்கு தமிழர்கள்... மலேசிய அமைச்சரவையில் இடம் பிடித்த நான்கு தமிழர்கள்! மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அ...
மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவ... மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு! மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி, இன்னிசைத் தென்றல், மலேசிய எம்.எல்.வசந்...
மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக... மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்? அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க்...
127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரண... 127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது - விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு! மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரண...
Tags: 
%d bloggers like this: