சிங்கையில் தமிழும் தமிழரும்!

சிங்கையில் தமிழும் தமிழரும்!

சிங்கையில் தமிழும் தமிழரும்!

எழுத்தாளர் ஏ.பி.இராமன் எழு திய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ என்ற நூலும் திருமதி சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ‘தமிழ்ச் சமுதாயமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்’ என்கிற ஆங்கிலப் பதிப்பும் 69, பாலஸ்டியர் சாலையில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கக் கட்டடத்தின் அரங்கில் நாளை ஞாயிறு காலை 10 மணிக்கு வெளியீடு காண்கின்றன. சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் சார்பில் வெளியீடு காணும் இவ்விரு நூல்களையும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுச் சிறப்பிக்கின்றார். இந்தி யர் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு.கே. கேசவபாணி தலைமை உரை நிகழ்த்த, முனை வர் சுப. திண் ணப்பன், திரு நா.ஆண்டியப்பன், திரு மா.அன் பழகன், திரு ஜோதி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொலைக்காட்சித் தயாரிப்பாளர் முகம்மது அலி, சமூகப் பேச்சாளர் த.ராஜசேகரன் (தலைமை நிர் வாகி, இந்து அறக்கட்டளை வாரியம்) இணைந்து படைக்கின்றனர். திரு ஜி.டி.மணி நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், த... இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், தமிழர்களும்! பிரிட்டிஷ்காரர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கி, சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் ...
‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங... ‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!! சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழி...
தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் ... தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம்! முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்...
பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள்... பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி மறைவு; தமிழறிஞர்கள் அஞ்சலி! பிரபல பட்டிமன்ற நடுவர், தமிழறிஞராக அறியப்பட்ட டாக்டர் அறிவொளி உடல்நலக் குறைவால் காலமானார்...
Tags: 
%d bloggers like this: