இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்கள் ஐவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போருக்கு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் சிலர் அகதிகளாக தஞ்சம் கோரினர். இவ்வாறு புகலிடம் கோரிய 350 ஈழத் தமிழர்கள் குடும்பங்களாகவும், தனி நபர்களாகவும் இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் ஆவார்கள்.

இந்நிலையில் அவர்களின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் கைது செய்து உயிருக்கு உத்தரவாதம் இல்லா நிலை ஏற்படலாம் அல்லது காணாமல் ஆக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. இதனால் தம்மை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் அகதி அந்தஸ்து வழங்கி வேறு நாடுகளில் தம்மை மீள்குடியேற்றுமாறும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழ அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் உலகத் தமிழர்கள் அனைவரும் தமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: