என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி உருக்கம்!

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! - ராகுல் காந்தி உருக்கம்!

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி உருக்கம்!

இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கெடுத்துக் கொண்டார். நிகழ்வின் ஒருபகுதியான கேள்வி நேரத்தில் ராகுல் காந்தியிடம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. ராகுலுடன் உரையாடியவர், “உங்களை நான் ஒரு கேள்வி கேட்கவேண்டும், அது உங்களை பாதித்தால் மன்னித்துவிடுங்கள். உங்கள் அப்பாவைக் கொன்றவர்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

சில நிமிட அமைதிக்குப் பிறகு பதிலளித்த ராகுல்., ”எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை!”

”நான் என் பாட்டியைக் கொன்றவர்களுடன் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அவர்கள் என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும். இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன் தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும் போது நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்து விடுகிறது.
அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள். தான் இறந்துவிடுவேன் என்று எங்கள் பாட்டி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று அப்பாவிடம் சொன்னேன்.

ஸ்ரீபெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது நான் ஹார்வார்டில் இருந்தேன். தேர்தல் பிரசாரம் தொடர்பான விவாதங்கள் அப்போது நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் எனது அப்பா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருவது ஆபத்தானது என்பதும் நாங்கள் அறிந்திருந்ததே. ஹார்வார்டில் எனக்கு திடீரென்று ஒரு போன் அழைப்பு வந்தது. எனது அப்பாவின் நண்பருடைய நண்பர் ஒருவர் அழைத்தார்.

“ராகுல்! உனக்கு ஒரு கெட்ட செய்தி என்றார்!”. என்னால் அந்தச் செய்தியை ஊகிக்க முடிந்தது. “இறந்துவிட்டாரா?” என்று கேட்டேன். ”ஆம்!”, என்றார். அழைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசியலில் இருக்கும் போது கண்ணுக்குத் தெரியாத பல சக்திகளுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது. அது பற்றிப் பொதுமக்களுக்கும் தெரிவதில்லை அதனால் நம் மீது வேறு மாதிரியான பிம்பம் படிகிறது.

அப்பா இறப்பிற்குப் பிறகு மிக நீண்ட காலம் எனக்குள்ளும், பிரியங்காவிற்குள்ளும் அந்தக் கோபம் அப்படியே இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது மாறிவிட்டது. ஈழத்தில் பிரபாகரனின் இறந்த உடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது உண்மையில் எனக்குள் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘ஏன் இவர்கள் பிரபாகரனை அவமானப்படுத்துகிறார்கள்?’ என்றுதான் தோன்றியது. அவரின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்குமாக வருந்தினேன். பிரியங்காவும் அதே சிந்தனையில்தான் இருந்தாள். காரணம், எங்களால் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் ஒரு குடும்பம், அதன் அற்புதம்மாள் குழந்தைகள் அந்தச் சமூகம் என அத்தனையும் பாதிக்கப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை. ஆம், நாங்கள் முழுவதுமாக எங்கள் அப்பாவைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்” என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பல்வேறு அரசியல் தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: