கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா!

கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா

கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா

பிப்ரவரி 13-2018

ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை ஆஸ்திரேலியா அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


2012-ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

ஆஸ்திரேலியா அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தது.

அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று ஐ.நா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்து, வரும் 22ஆம் நாள் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஆஸ்திரேலியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: