தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவும் அரிதான நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் கண்டுபிடிப்பு!

தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவும் அரிதான நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் கண்டுபிடிப்பு!

தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவும் அரிதான நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் கண்டுபிடிப்பு!

தஞ்சை அருகே 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான இந்த நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் சிவன்கோவிலை சேர்ந்தது. இக்கோவிலில் 1972ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 4 சிலைகள் மாயமாகியுள்ளன. அதில் நடராஜர் சிலையும் ஒன்றாகும். சிலை தொடர்பான புகைப்படம் ஒன்றை பத்திரப்படுத்தி வைத்திருந்த தஞ்சை புகைப்பட கலைஞர் ஒருவர் அதனை சிங்கப்பூரில் உள்ள சிலை மீட்பு தன்னார்வ குழுவிக்கு அனுப்பியிருந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


அதனடிப்படையில் விவரங்கள் சேகரித்த போது நியூயார்க்கில் தற்போது நடைபெற்று வரும் கண்காட்சியில் நடராஜர் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜர் சிலை குறித்த தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இக்கோவிலில் ஆய்வு நடத்திய ஐஐி.பொன்மாணிக்கவேல் சிலையை மீட்க வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஐந்தரை அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிலையின் தற்போதைய சர்வதேச மதிப்பு 40 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்... திருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விள...
தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு... தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு! கி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தம...
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள்... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு! கீழடியில் நடந்து வரும் நான்காம் கட்ட அகழாய்வில் சுடுமண் ...
ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்... ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு! ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டற...
Tags: 
%d bloggers like this: