அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழக மாணவி!

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழக மாணவி!

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழக மாணவி!

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள் தேர்தல் மையம் இதை அறிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்ருதி பழனியப்பன் போட்டியிட்டார். இவரின் அணி சார்பாக ஹூஷா என்பவர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நடைன் எம்.கூரி மற்றும் அர்னவ் அகர்வால் ஆகியோர் இவர்களை எதிர்த்துப் போட்டியிட்டனர். தேர்தலில் ஸ்ருதி அணிக்கு 41.5 சதவிகித ஓட்டுகளும் எதிர் அணிக்கு 26.6 சதவிகித ஓட்டுகளும் கிடைத்தன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல மாற்றுவதுதான் லட்சியம் என்று கூறி ஸ்ருதி பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்த வாக்குறுதிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்ருதி, “மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, மாணவர்களின் சமூகப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது , பாலியல் சமத்துவத்தை எட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போகிறேன்” என்றார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கடந்த 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமெரிக்காவின் பழைமையான பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்று. ஸ்ருதி பழனியப்பனின் பெற்றோர் கடந்த 1992-ம் ஆண்டு சென்னையில் இருந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் த... குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் தமிழில் பேசி அசத்திய செக் குடியரசு மாணவி! ''தமிழ் கடினமான மொழிதான், ஆனால் மிகவும் அழகான மொழி'' என க...
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சா... காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்! நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து...
“மே முதல் வாரம் சவுதி மன்னரோடு சந்திப்பு, அடுத்த வ... “மே முதல் வாரம் சவுதி மன்னரோடு சந்திப்பு, அடுத்த வாரம் ட்ரம்ப்போடு!” அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்! “நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம்....
இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!... இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை! வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்க விரும்பும் பிற நாட்டவருக்கும், தமிழைச் சேர்ப்பது த...
Tags: