அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்காவில் படிக்கச் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பயிற்சி கிடைத்தால் போதும் என்று தோன்றலாம். இந்த இரண்டு வாய்ப்புகளுமே அமெரிக்கக் குடிமகன்களுக்கு எளிமையாகக் கிடைத்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த கன்னிகா குழந்தைவேலுவுக்கும் அப்படி இரு வாய்ப்பும் ஒரு சேர கிடைத்திருக்கிறது என்பது ஆச்சரியம்தான்.

கன்னிகாவின் சொந்த ஊர் கோவை. ஈரோட்டில் ஒரு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். 2006-ல் படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் ஸ்டீல் டிசைனிங் வேலையில் சேர்ந்தார். அதன் பிறகு மேற்படிப்புக்காக வெர்ஜினியா சென்றார். அங்கு சென்றதும் புவி இயற்பியல் (ஜியோ பிசிக்ஸ்) படிக்கத் தொடங்கினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

பி.இ. படிக்கும்போதே ஜியாலாஜியும் சேர்த்துதான் படித்தேன். இந்தியாவிலிருந்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு வருபவர்கள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் அறிவுத் திறனோடு இருப்பார்கள் என்ற எண்ணம் அமெரிக்காவில் இருக்கு.

இதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவில் சுலபமாக புவி இயற்பியல் மேற்படிப்புக்கு இடம் கிடைத்தது. அதோடு ஆறு ஆண்டுகள் வேலை அனுபவமும் இருந்ததால் நாசாவில் பயிற்சிக்கு இடம் கொடுத்தார்கள். ஒரு திட்டத்தில் என்னை சேர்த்து மூன்று மாத காலம் நாசாவில் பயிற்சி கொடுத்தார்கள். அந்தத் திட்டத்தில் இப்போதும் இருக்கிறேன். ஆனால், அந்தப் பணியை நாசாவுக்கு வெளியே இருந்து செய்கிறேன் ” என்கிறார் கன்னிகா.

2015-ல் புவி இயற்பியல் முதுகலை படிப்பை முடித்த உடனே புவி இயற்பியல் பிரிவில் ஆய்வுப் படிப்பிலும் சேர்ந்துவிட்டார் கன்னிகா. ஆய்வுப் படிப்பில் கடலுக்கடியில் எரிமலைகள் எவ்வளவு வெப்பத்துடன் நெருப்பைக் கக்குகின்றன, அந்த வெப்பம் கடலையும் பூமியையும் எப்படிப் பாதிக்கிறது என்பது பற்றி ஆய்வில் ஈடுபட்டார்.

“நான் இப்பவும் ஸ்டூடண்ட் விசாவில்தான் இருக்கிறேன். ஸ்டூடண்ட் விசாவில் இருக்குறதால ஒரு வாரத்துக்கு 20 மணி நேரம்வரை பல்கலைக்கழக வளாகத்தில் வேலை செய்யலாம். இளங்கலை மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் அனுப்புவார்கள் அல்லது ஆய்வுக்காகவும் பயன்படுத்திக்கொள்வார்கள். எந்த வேலையைச் சொல்கிறார்களோ அதில் ஈடுபடுவது எனது வழக்கம். இதற்காக எனக்கு ஊக்கத் தொகை கொடுத்திருக்கிறார்கள்”

“நாசாவில் வேலை செய்ய வேண்டுமென்றாலோ பயிற்சி பெற வேண்டுமென்றாலோ முதலில் அமெரிக்கக் குடியுரிமை இருக்க வேண்டும். பொதுவாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்குறது குதிரைக் கொம்புதான்.

ஒரு சில படிப்புகளை வைத்து பெரிய அளவில் நிபந்தனைகள் இல்லாமல் பயிற்சியும் கொடுப்பது உண்டு. அப்படித்தான் எனக்கு கிடைச்சது. என்னைப் போல பூமியைப் பற்றி படிக்க விரும்பினாலோ அல்லது வேறு ஏதாவது வாய்ப்புகள் கிடைத்தாலோ நாசாவில் பயிற்சி எடுக்க விண்ணப்பிக்கலாம். தகுதியை வளர்த்துக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.” என்கிறார் கன்னிகா.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: