அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!

இரு தினங்களுக்கு முன், உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் சுபானு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். 2017-ல் துபாயில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் 1 தங்கப் பதக்கமும், 2018-ல் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் 1 தங்கப் பதக்கமும் பெற்றார்.

இதுவரை தென்னிந்தியா, வட இந்தியா மற்றும் தேசிய அளவில், தான் கலந்துகொண்ட அத்தனை யோகா போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார் சுபானு. இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் நிலைக்கு இறங்கியிருக்கிறாள். இந்நிலையில், நவம்பர் 5-ம் தேதி தென் அமெரிக்காவில் உள்ள ரோசாரியோவில் நடந்த உலக அளவிலான யோகா போட்டியில் 12 – 15 வயதிற்கான பிரிவில் கலந்து கொண்டு சுபானு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றிபெற்ற மாணவி சுபானுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

“இளம் சாதனையாளர் விருது, யோகா கலாமணி, யோக பாரதி, யோக பரணி, யோக அர்ஜுனா, லிட்டில் ஸ்டார்” எனப் பல விருதுகளைக் குவித்து வைத்திருக்கும் சுபானு, 15 நிமிடங்களில் ஆணிப் பலகையின் மீது அமர்ந்து 316 ஆசனங்கள் செய்துள்ள உலக சாதனைக்கு சொந்தக்காரர். பிரிட்ஜ் ஆசனம் செய்து இரண்டு முறை கின்னஸில் இடம்பிடித்துள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

நற்றிணை முழு தொகுப்பு!... நற்றிணை முழு தொகுப்பு! நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்ட...
பாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எ... பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்! மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண...
மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய ந... மாட்டு வண்டி சவாரி - தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு! தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி...
இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், த... இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், தமிழர்களும்! பிரிட்டிஷ்காரர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கி, சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் ...
Tags: