பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம், ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனிடையே தமிழக அரசு சார்பிலும் 7 பேரின் குடும்பங்கள் சார்பிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக south windsor-ல் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதினர். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ், பிரபு ராமகிருஷ்ணன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீக ராஜன் ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து, தமிழக அமைச்சரவையின் முடிவை மனிதநேயத்துடன் ஏற்கக் கோரி ஆளுநருக்குக் கடிதங்கள் அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

“டைம் சதுக்கத்தில்” தூத்துக்குடி படுகொ... டைம் சதுக்கத்தில்" தூத்துக்குடி படுகொலை -  கண்டனப் போராட்டம்! தூத்துக்குடி படுகொலையை காரணமான இந்திய அரச பயங்கரவாதத்தை கண்டித்து வட-அமெரிக்க தமிழர்கள...
தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்!... தென் அமெரிக்காவில் சாதனை படைத்த ஈழத் தமிழர்! இலங்கை அரசின் கொடியை உயர்த்திக் கொண்டு ஓடினார்! தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் ஈழத் ...
கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள்... கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு! கனடிய எதிர்க்கட்சித் தலைவரும் கன்சவேட்டிக் கட்சியின் த...
கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! முதன்முற... கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! முதன்முறையாக ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு தேர்வு! ஜூன் 7ஆம் தேதி கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடை...
Tags: