அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!

2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ்.

2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர்.

54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர்.

ஏபிசி தொலைக்காட்சியின் குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது தம் நாட்டை நேசிப்பதாகக் கூறினார்.

வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு போட்டியிடும் எட்டாவது நபர் கமலா. ஜனநாயக கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும்.

“அமெரிக்க விழுமியங்களை பாதுகாப்பதற்காக குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்” என்று டிவிட்டரில் வெளியிட்ட ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபேண்ட், துள்சி கப்பார்ட், ஜான் டெலானி, ஜூலியன் கேஸ்ட்ரோ உள்ளிட்டோர் ஜனநாயகக் கட்சி வேட்பாளராவதற்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் கமலாவுடன் சேர்த்து நான்கு பெண்கள் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேட்பாளர் போட்டியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. ஒருவேளை வேட்பாளராக கமலா தேர்ந்தெடுக்கப்பட்டால், முக்கியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் பெண்ணாக இவர் இருப்பார்.

வாஷிங்டனில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமது பிரசாரத்தைத் தொடக்கிய கமலா, பகுதியளவு அரசுப் பணிகள் முடக்கத்தை நீட்டிப்பதன் மூலம் அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களை பிணைக் கைதிகளாக நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

மிகக்கடுமையாக இருக்கப்போகும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் தாக்குப்பிடித்து மோதக்கூடியவர் கமலா ஹாரிஸ் என்று கூறும் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஜர்ச்சர் அவரது கலிபோர்னியா மாகாணம் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கையிலும், நிதிதிரட்டும் வலிமையிலும் செழுமையான மாகாணம் என்று கூறுகிறார்.

தமது கட்சியின் வளர்ந்துவரும் பன்முகத்தன்மையை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இவர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கலிபோர்னியா மாகாண குற்ற நீதி சீர்திருத்த முயற்சிகளை கமலா ஆதரிக்கவில்லை என்று இவரது விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: