தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!

‘கூகுள்’ நிறுவனம், அதன் விளம்பர தளங்களில், தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ‘கூகுள் அட்வார்ட்ஸ், கூகுள் அட்சென்ஸ்’ தளங்களில், இனி, தமிழில் விளம்பரங்களை வெளியிடலாம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது குறித்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையினருக்கு, ஆங்கில புலமை குறைவு. அதனால், இந்திய மொழிகளில், விளம்பரங்களை வெளியிடும் வசதியை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஏற்கனவே அறிமுகமான ஹிந்தி மொழி விளம்பரங்களுக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, தற்போது, தமிழ் மற்றும் வங்க மொழிகளில், விளம்பரங்கள் வெளியிடும் வசதி அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம், கருத்துருவாக்குவோரும், விளம்பரதாரர்களும், இந்த வசதியை பயன்படுத்தி, தங்கள் படைப்பு­களை, எண்ணற்றோரின் பார்வைக்கு கொண்டு செல்லலாம். தமிழில் வலைதளம் மற்றும், ‘பிளாக்’ வைத்து உள்ளோரும், இனி கூகுள் அட்சென்சில் பதிவு செய்து, தங்கள் கருத்துருவாக்கத்தில் விளம்பரங்களை வெளியிடலாம். இதன் மூலம் சர்வதேச அளவில், விளம்பரதாரர்களை கவரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: