காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்திய 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் போட்டியில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் வரைந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


மொத்தம் 193 நாடுகளில் இருந்து 3000 குழந்தைகள் அனுப்பிய ஓவியங்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த காவியா, ஸ்ரீஜித்தின் ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதில், காவியா, ஸ்ரீஜித் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்கள் வரைந்த ஓவியம் நாசாவின் 2018-ம் ஆண்டு காலண்டரில் பிரசுரிக்கப்படும். அதுமட்டுமல்லாது அந்த காலண்டர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் அனுப்பிவைக்கப்படும்.

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

பி.ஜே.காவியா, வயது 11. கே.செல்வ ஸ்ரீஜித் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நாசா நடத்திய 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் இடம்பெறக்கூடிய ஒவிய போட்டியில் கலந்துகொண்டனர்.

மாணவர் செல்வா ‘வீட்டிலிருந்து எதை கொண்டு செல்வீர்கள்’ (‘What would you take from home?’) என்ற தலைப்பில் படத்தை வரைந்தார். அதன் கீழ் அவர் ஒரு விளக்கமும் அளித்திருந்தார். அதில், “இன்று விண்வெளி செல்லும் ஒவ்வொரு வீரரும் ஏதோவொரு தனிச்சிறப்பான பணியை மேற்கொள்ளவே செல்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவருமே வீட்டிலிருந்து வெகுதொலைவு செல்கின்றனர். அதனால், அவர்கள் தங்கள் வீட்டை

நினைவுபடுத்தும் தங்கள் மனதுக்கு நெருக்கமான சில பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். சிலர் இசைக்கருவிகளையும், சிலர் எம்.பி.3 பிளேயரையும் இன்னும் சிலர் பொம்மைகளையும் எடுத்துச் செல்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

விண்வெளி உணவு’ (‘Space food’). தலைப்புக்கேற்ற படத்தை வரைந்த மாணவி காவியா, “விண்வெளியில் மளிகைக் கடைகள் இல்லை. அதனால் விண்வெளி ஆய்வு மையத்துக்கு உணவு பதார்த்தங்களை அனுப்பிவைக்கும்போது அதில் பழங்களும், காய்கறிகளும் இருக்கும். ஆனால், அவை எல்லாம் முன்னதாகவே பேக்கிங்கில் பதப்படுத்தப்பட்டிருக்கும். ஏனெனில் அவை நீண்ட் நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. விண்வெளி வீரர்கள் அங்கேயே சில பயிர்களை வளர்க்க வேண்டும் அதன் மூலம் தங்களுக்கான சத்தான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நாங்களும் அதையே விரும்புகிறோம். ஒருவேளை, விண்வெளி வீரர்களால் அங்கேயே செடிகளை வளர்க்க முடிந்தால் அது அவர்களுக்கு எப்போதும் பூமியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் இருவருக்கும் நாசா பரிசு வழங்குவதுடன், நாசா 2018 காலண்டரையும் பரிசாக அளிக்கும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: