அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்!

அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்!

அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்!

அமெரிக்காவின், எம்.ஐ.டி., பல்கலையின் இன்ஜினியரிங் ஸ்கூல் டீனாக பதவியேற்று, தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ளார், சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன்.

சென்னையில், உயர்நிலைப் படிப்பிற்கு பின், அமெரிக்கா சென்றார். அவரது தாய், பயோ கெமிஸ்ட்; சிறு வயதிலேயே, தாயின் ஆய்வகத்தில் தான், இவர் அதிக நேரம் செலவழித்து இருக்கிறார். பெர்க்கிலேவில், ௧௯௮௯(1989) – ல் இளங்கலை பட்டமும்; ௧௯௯௦(1990) – ல், முதுகலை பட்டமும் பெற்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


குறைந்த மின் சக்தியில், ‘சிப்’ தயாரிப்பு செய்வதில் கெட்டிக்காரரான சந்திரஹாசன், ௧௯௯௪ (1994) – ல் எம்.ஐ.டி.,யில் சேர்ந்தார். ஆனால், முதுநிலைப் படிப்பு மற்றும் முனைவர் பட்டம் ஆகிய இரண்டும், எம்.ஐ.டி., கிராஜுவேட் புரோகிராமில் இருந்து நீக்கப்பட்டது.

எம்.ஐ.டி., பேகண்டியில் இணைந்தவுடன், 2009-ல், இவர், மைக்ரோசிஸ்டம்ஸ் டெக்னாலஜி லேபாரட்டரிசில் இயக்குனராக பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, 2011ல், இ.இ.சி.எஸ்.,ன் தலைவரானார். இவர், ‘ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ நாட்டிக்ஸ்’ பேராசிரியர் ஜெரோம் சி ஹன்சக்கர் என்பவருடன் போட்டி போட்டு, இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

எம்.டி.எல் மற்றும் இ.இ.சி.எஸ்., உடன் நிர்வாக துறையில், பொறுப்பில் இருந்தாலும், இவர் புரொடக்டிவ் ரிசர்ச் கெரியரை தொடர்கிறார். செக்யூரிட்டி ஹார்டுவேர், எனர்ஜி ஷார்வெஸ்டிங் மற்றும் இன்டர்நெட் கருவிகளுக்கான வயர்லெஸ் சார்ஜிங், மல்டி மீடியா செயல்பாடுகளுக்கான சிஸ்டம் அல்ட்ராலோபவர், பயோ மெடிக்கல் எலக்டரானிக்ஸ் பயன்பாடுகளுக்கான பிளார்ட் பார்ம் ஆகியவற்றை செயல்பாடுகளுக்கு கொண்டு வந்த, எம்.ஐ.டி., எனர்ஜி எபிஷியன்ட் சர்க்யுட்ஸ் மற்றும் சிஸ்டம்ஸ் குருப்ஸ்யையும், சந்திரஹாசன் வழி நடத்துகிறார்.

இ.இ.சி.எஸ்., எனப்படும், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில், ஆராய்ச்சி மாணவர்கள், தொழில் முனைவோருக்கு குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு செய்வதற்கும், புதிய தொழில் முனைவோருக்கான திட்டங்களை உருவாக்குவதற்கும், பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார், சந்திர ஹாசன்.

அறிவு சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இன்பெக் ஷியஸ் எனர்ஜி ஆகிய இரண்டு துறைகளிலுமே குறிப்பிடத்தக்க அளவில், மிகப்பெரிய திறமை பெற்றவர். எந்த ஒரு விஷயத்தையும் மிக ஆழ்ந்து கவனித்து கற்பதோடு, மற்றவர்களின் கருத்துக்களை கூர்ந்து கவனிக்கும் திறமையுடையவர்.

எலக்ட்ரானிக் சர்க்யுட்டில் சாதனை:

மின்சாரத்தை ஆற்றலுடன் கடத்தும் எலக்ட்ரானிக் சர்க்யுட் கண்டுபிடிப்பிற்கான ஆய்விற்காக, அதிகளவில் உழைத்தார். மேலும், போர்ட்டபிள் கம்ப்யூட்டர்களின் குறைந்த மின்சக்தி கொண்ட, ‘சிப்’ கண்டுபிடித்ததன் மூலம், எலக்ட்ரானிக் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். இவர் கண்டுபிடித்த, ‘சிப்’ தான், தற்போதுள்ள அமெரிக்கா முதல் ஆண்டிபட்டி வரை, சக்கை போடு போடும், ‘ஸ்மார்ட்’ போன்கள் உள்ளிட்ட, மற்ற மொபைல் போன்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எனர்ஜி சார்ந்த பல பிரிவுகளில், அவரது பங்கு அளப்பரியது. இ.இ.சி.எஸ்., துறையில் அவர் பணிபுரிந்த போது, துறை மாணவர்களுக்கான பல்வேறு புதிய துவக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, சூப்பர் யுரோப் என்ற அவரது அட்வான்ஸ்ட் அண்டர் கிராஜுவேட் ரிசர்ச் ஆப்பர் குனிட்டிஸ் புரோகிராம்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இது பரவலாக நல்ல வரவேற்பை பெற்று, பின், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் முழுமையும் அவரது புரோகிராம் விரிவுப்படுத்தப்பட்டு, அவரது திறமைக்கு மணி மகுடமாக அமைந்தது.

அகாடமிக் கேரியரை புதிதாக துவங்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர் ‘ரைசிங் ஸ்டார் புரோகிராம்’ நடத்துகிறார். இதன் மூலம், மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, ஓர் அருமையான தளமாக அமைந்துள்ளது. இவரது வழிகாட்டுதலின் படி செயல்படும் மாணவர்கள், தங்கள் திறமையை சிறந்த முறையில் வளர்த்து கொள்கின்றனர், லேப்பை தாண்டியும், அவருக்கு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் அளப்பரிய ஆர்வம் இருந்தது. எம்.ஐ.டி.,யின் புதிய இன்ஜின் கண்டுபிடிப்பில், வாரிய உறுப்பினராகவும், ஆலோசனை குழு உறுப்பினராகவும் தன் பங்களிப்பை தந்துள்ளார்.

‘ஆன்லைன்’ கல்வியிலும், சந்திரஹாசனுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. எம்.ஐ.டி.,யின் வீட்டு கல்வித் திட்டம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம், மாணவர்களுக்கு அதிக இன்ஜின் டெவலப்மென்ட்டில் லீடராக, ஹாசனின் பங்கு முக்கியமானது. புதிய கல்வித் திட்ட முறை குறித்து, மற்ற துறைத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறுகிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: