அமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்!

அமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்!

அமெரிக்காவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்!

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று தன் புரட்சிகரமான சிந்தனைகளால் புது ரத்தம் பாய்ச்சிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரில், அமெரிக்காவில் முதன்முதலாக டெலவர் மாநிலத்தில், ஏப்ரல் 20 , 2019 அன்று, ‘புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்’ என்கிற புதியதோர் அமைப்பு, தொடக்கவிழா மற்றும் அவரது 129-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், பிரிசில்லா ரேபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து, ‘புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்’ தொடக்கவிழா நிகழ்ச்சி, அரங்கத்தில் இருந்த அனைவரது கரவொலியோடு கோலாகலமாகத் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்த தெற்காசியத் துறை பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் வாசு அரங்கநாதன், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர், முனைவர் முத்துவேல் செல்லையா மற்றும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் படத்தைத் திறந்துவைத்து, தமிழ் மன்றத்தைத் தொடக்கி வைத்தனர்.

மன்றத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்குறித்து எடுத்துரைத்தார், ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன்

தொடர்ந்து, டெலவரில் இயங்கும் சலங்கை நடனப் பள்ளியின் நிறுவனர் இந்துமதி கோபாலகிருஷ்ணனின் பயிற்சியில், சிறார்கள், பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

Tags: