தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

அமெரிக்கா தாலஸ் நகரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவுவதற்காக, அமெரிக்கா தாலஸ் நகரில் `கொஞ்சும் சலங்கை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி நன்கொடையை திரட்டி உள்ளனர்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க, போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான், அமெரிக்க தமிழர்கள், அங்குள்ள தமிழர்களை ஒன்று திரட்டி, பல்வேறு நிகழ்வுகள் நடத்தி, அதில் வரும் நிதியை கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகரத் தமிழ் மக்கள் மற்றும் வட கரோலினா வாகை குழுவினர் ஏற்கெனவே மொய்விருந்து நடத்தி, அதன் மூலம் கிடைத்த நிதியிலிருந்து ரூ.17 லட்சத்தைப் புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் வாழ்வாதாரப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், சோலார் மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் மீண்டும், அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகரத் தமிழ் மக்கள் உதவியோடு `தமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ்’ நாகப்பட்டினம் அருகே சீர்காழி அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவும் வகையில், `கொஞ்சும் சலங்கை’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி அதன்மூலம் 61,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாகத் திரட்டி உள்ளனர். விரைவில் ஒருங்கிணைப்புக் குழுவினர் அதை நேரடியாக அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் வழங்க உள்ளனர்.

தமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ் அமைப்பின் உறுப்பினரான பிரவீணா வரதராஜன் கூறும்போது, “கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சி மூலம் 41 லட்சம் வரையிலும் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதை வைத்து சீர்காழியில் உள்ள நம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவ உள்ளோம். அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தம் செய்யத் துணி துவைக்கும் எந்திரம், அவர்களுக்குத் தேவையான நாற்காலிகள், சமையலறையின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மீதமுள்ள தொகையை முழுவதுமாக அன்பாலயத்தின் ஆயுட்காலப் பராமரிப்புக்காக நிரந்தர வைப்பு நிதியாக வைப்பதுடன், அதில் வரும் வட்டித் தொகையிலிருந்து அன்பாலயத்தின் சிறப்பு ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிடவும், திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து நம் தமிழ் சொந்தங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: