முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து இதை நடத்தவுள்ளது. இந்த மாநாடு முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது. தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இதில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுவின் பொறுப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறியதாவது : ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும் மலேயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாய அடிகளார் 1966-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ம் ஆண்டு சென்னையில் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன.

இப்போது 2019-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாநாட்டுக்குச் சிறந்த கட்டுரைகள் வர வேண்டும் என்பதற்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் அறியப் பெறாதவர்களும் அருமையான கட்டுரைகள் தொகுத்துத் தர முடியும் என்பதால் பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கப் பெறும் கட்டுரைகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெறும். இந்தக் கட்டுரைகள் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியது மட்டுமல்லாமல் ‘கணினி தமிழ் எவ்விதம் உலகில் தமிழின் நிலைமையை உயர்த்தும்’ என்பது பற்றிய கட்டுரைகளும் வரவேற்கப்படும். தமிழகம் மற்றும் தெற்காசியாவின் பல பகுதிகளில் நடந்துகொண்டிருந்த இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து உரத்தக் குரலில் உலகுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது. தமிழ் அன்னைக்கு அமெரிக்கா சூட்டப் போகும் மகுடம் இது” எனத் தெரிவித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை ... ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்! அமெரிக்காவில் உள்ள சீக்கி...
FIRST INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL ST... Introductory Speech by Rev.Father Xavier Thaninayagam! Conference Programme: The first International Conference of Tamil Studies, sponsored by the ...
திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வ... திருக்குறள் ஜேசனார்: அமெரிக்கரின் அர்த்தமுள்ள ஆய்வு! திருக்குறளை ஜி.யு.போப் உள்ளிட்ட பலர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். உலகில் இதுவரையில்...
SECOND INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL S... SECOND INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Madras - 1968! Brief Report from Proceedings, Published by the International Association...
Tags: