List/Grid

Monthly Archives: July 2018

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு… Read more »

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை… Read more »

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை… Read more »

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடிய பெண் குழந்தைகள் அணிக்கு தலைமை வகித்தவர் சங்கீதா. ”தெருவோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான்…. Read more »

‘வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்காகவா?’

‘வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்காகவா?’

வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும்… Read more »

ஈழத்தின் சிறப்புக்குரிய  தங்கத்தாத்தா கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 65வது நினைவு தினம், இன்று!

ஈழத்தின் சிறப்புக்குரிய தங்கத்தாத்தா கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 65வது நினைவு தினம், இன்று!

“அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு மாறு முகப் பதுமம்” என்று தனது பதினெட்டு வயதில் முருகனைப் பாடியவர் சோமசுந்தரப் புலவர் (10/07/1953 – 10/07/2018). ஈழத் திருநாட்டின் செய்யுளின் வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்ப்போமேயானால் முக்கிய இடத்தை பெற்றவர்கள் ஒரு சிலரே… Read more »

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

இலங்கை யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க எதிர்ப்பு!

இலங்கை யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க எதிர்ப்பு!

இலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாண கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று மாலை… Read more »

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்து சென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களைச்… Read more »

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னபாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்… Read more »